அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி யின் உரையை இடைமறித்து பதில் வழங்கிய ஜனாதிபதி அநுர

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (31) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து வடக்கு கிழக்கில் வைத்தியர் நியமனம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல்களை முன்வைத்த போது அவரது உரையை இடைமறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவருக்கு பதில் வழங்கியுள்ளார்.

வடக்கு – கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும்.

அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் வடக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலை பிரச்சினை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிக நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, அதனை இடைமறித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவருக்கு விளக்கமளித்துள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற 3 அலுவலகங்கள்