உள்நாடுவணிகம்

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தையில் அரிசியின் விலை தற்போது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் அதிகரித்து காணப்படுகின்றது.

அனைத்து விதமான அரிசி வகைகளும் 100 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.

இந்நிலையில், அரிசி விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம, பொலன்னறுவையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு பூரண ஆதரவை வழங்க தயார் – IMF

editor

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

250 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா