உள்நாடு

அரிசி இறக்குமதி அனுமதி நாளையுடன் நிறைவு – மீண்டும் நீட்டிக்கப்படுமா ? இல்லையா ?

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது.

தற்போதுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, நேற்று (08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் வௌியிடப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி மீண்டும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை

Related posts

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

மாளிகாவத்தையில் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை