உலகம்

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹரி

(UTV|பிரிட்டன் )- பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இருவரின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,`இது பல மாத விவாதங்களுக்கு பிறகு எடுத்த முடிவு` என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும், பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழு நேர பணிக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுடைய நேரத்தை வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட ஒரு இடத்தில் செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், அரசி, காமன்வெல்த் மற்றும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு மதிப்பளிக்கும் கடமையை தொடருவோம் எனவும் கூறியுள்ளனர்.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் நிலையிலிருந்து விலகியதும், லண்டன் அரச குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறையாண்மை மானியத்தை இனி பெறப்போவது இல்லை என ஹாரியும், மேகனும் அறிவித்துள்ளனர். இந்த முடிவு, அரச குடும்பத்தின் பொருளாதார சுதந்திரம் கொண்ட உறுப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸ் – மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைக்க ட்ரம்ப் நடவடிக்கை

அமைதிப்படைக்கு பரிசாக இரண்டு இலட்சம் தடுப்பூசி