உலகம்

அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி

(UTV|இங்கிலாந்து )- பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். ஹாரி மற்றும் மேகன் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

Related posts

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

75 வதுகுடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

அகதிகளை வெளியேறுமாறு பாக்கிஸ்தான் அரசாங்கம் உத்தரவு!