சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO)-அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பலத்த சூறாவளி வீசக்கூடும்