உள்நாடு

அரசுப்பணியிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  அரசுப்பணியிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தேர்வின் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் பற்றாக்குறைக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

மாகாண அடிப்படையில் உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகள் வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுயேட்சைக் கட்சிகள் கூட்டமைப்பினால் 21வது திருத்த சட்டத்தில் 7 திருத்தங்கள்

சாரதியை மிலேச்சத்தனமாக தாக்கும் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு