உள்நாடு

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் 20 ஆம் திகதியுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இத்தினங்களில் முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர்

குறித்த காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, தொகுதி இல – 02, இரண்டாவது மாடி, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கொழும்பு – 07 என்ற விலாசத்தில் குறித்த முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது

ஜனாதிபதி தேர்தல் போன்று ஸ்ரீ.சு.கட்சி சில உடன்படிக்கைகளுடன் களத்தில் இறங்கும்

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்: தூதரம் அறிவிப்பு