உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக, அதன் அதிகார காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து