உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும்

(UTV | கொழும்பு) –       அரசியல் தெரியாத மற்றும் புரியாத கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. அவரை அரசியலுக்கு கொண்டு வருமாறு நாட்டின் வேறு குரல்கள் எழுப்பட்டன.

எழுப்பட்ட அந்த குரல்களுக்காகவே நான் அவரது வெற்றிக்காக பாடுபட்டேன். புத்திஜீவிகள் எனக்கூறிக்கொள்வோர் கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலேசானைகளை வழங்கினர் எனவும் நிமல் லங்சா குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வர வேண்டும் என்று பௌத்த பிக்குமார், சிங்கள தேசியவாதிகள் உட்பட புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அத்துடன் ஹிட்லரை போன்ற ஒருவர் நாட்டின் தலைவராக வர வேண்டும் எனவும் அதற்கு பொறுத்தமானவர் கோட்டாபய ராஜபக்ச எனவும் பௌத்த பிக்கு ஒருவர் பகிரங்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை

சமூக வலைத்தள பிரச்சாரங்கள் குறித்து ரணிலின் உத்தரவின் பேரில் விசாரணை