சூடான செய்திகள் 1

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) இன்று(11) மாலை 05.00 மணிக்கு எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

மேற்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மற்றும் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் என்பவற்றை நடத்துவது தொடர்பில் காணப்படும் சட்ட சிக்கல்கள் தொடர்பிலும், வாக்காளர் பெயர்பட்டியல் மீள்திருத்தம் தொடர்பிலும் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த உள்ளூராட்சி ​தேர்தலில் தேர்தல் நடத்தப்படாத எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஹக்கீம், ரிஷாட், மனோ எமது கூட்டணியின் பங்காளிகளாகவே உள்ளனர் – SJB

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!