உள்நாடு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழப்பு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபத்து தொடர்பிலான விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்

புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு ஔடத உற்பத்தி நிலையத்தை அமைக்க அனுமதி