உள்நாடு

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை!

(UTV | கொழும்பு) –

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.

இன்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது. திடீரென அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியது.இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை காலை வேளையில் அண்மையில் பனி மூட்டம் காணப்பட்ட போதிலும் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.இது தவிர கடல் பிராந்தியங்களில் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதனால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் இருந்து தவிர்ந்து வருகின்றனர்.இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது

பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் திடிரென மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன் சில குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் வெள்ளம் வடிந்தோடிய நிலையில் தத்தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் மீண்டும் மழை வீழ்ச்சி ஆரம்பித்துள்ளதனால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலையினை தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி

பெர்பெர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

editor