அரசியல்உள்நாடு

அம்பாறையில் கட்டுப்பணத்தை செலுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச சபையில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் நேற்று (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு உறுப்பினரும் ரிசாட் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் அல் மனார் சமூக சேவை அமைப்பின் தலைவருமான கே.ஆர்.எம்.ரிசாட் அவர்களும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது .

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு அக்கினிப் பரீட்சை – முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

editor