சூடான செய்திகள் 1

அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதியின் ஒருபகுதி திடீர் தாழிறக்கம்!!

(UTV|COLOMBO)-அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதியின் ஒருபகுதி திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால் பாலமொன்று உடைந்ததால் இன்று முற்பகல் இவ்வாறு வீதி தாழிறங்கியுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக மாமடல – வலேவத்த தொடக்கம் புஹுல்யாய ஊடாக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அம்பலாந்தோட்டை பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தாழிறங்கியுள்ள பகுதி மிகவிரைவில் மறுசீரமைக்கப்படும் என அதன் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு

சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதம் அட்டன் டிப்போவும் கடும் பாதிப்பு