உள்நாடு

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை

(UTV | கொழும்பு) – காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அமைச்சருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், 25 மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமைச்சரின் மனைவி மொரின் ரணதுங்க மற்றும் மற்றுமொருவரையும் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேல்மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைகளை குவிப்பதற்கு தேவையான அனுமதி வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பில் கிஹான் மெண்டிஸ் என்ற வர்த்தகரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Related posts

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஆய்வறிக்கை

editor

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்