சூடான செய்திகள் 1

அமைச்சரவைக் கூட்டம் இன்று (18)…

(UTV|COLOMBO)  கடந்த வாரம் இடம்பெறாதிருந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதுடன் இதற்கான உத்தியோகபூர்வ தகவல் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

பாராளுமன்றத் தெரிவுக் குழுவை கலைக்கும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்களை அழைத்து அறிவித்திருந்தார். இதனை அடுத்து கடந்த வாரம் செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

 

இருப்பினும் தற்போது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு இணங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்

Related posts

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்