அரசியல்உள்நாடு

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையில் சந்திப்பொன்று நேற்று (22) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் தொடர்பாகவும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அலுவலகத்தின் அரசியல் பொறுப்பதிகாரி ஆதம் எல்.மிச்சலோ, அரசியல் அலுவல்கள் நிபுணர் நசீர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துப்படுத்தி அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி மது கல்பனா தோழர் இணைந்துகொண்டிருந்தார்.

Related posts

இந்திய உர விவகாரம், உண்மைக்குப் புறம்பானது – பி.பீ

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான அறிவிப்பு!