வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார்.
மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சில முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய மகாராணியை சந்திக்கவுள்ள ட்ரம்ப், அவருடன் பிரத்தியேக பகல் போசனத்தில் கலந்து கொள்வதுடன், இளவரசர் சாள்ஸ் உடன் தேநீர் விருந்திலும்; கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பக்கிங்ஹாம் மாளிகையில் ராஜதந்திரிகர்களுடனான விருந்து உபசாரத்திலும் ட்ரம்ப் பங்கு கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய ஒருவருடன் எட்டு பேர் கைது

முகேஷ் அம்பானி மகள் திருமணம் ஆடம்பரமாக நடந்தது

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு