உலகம்

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஈரானின் கொள்கை ஒரே மாதிரிதான்

(UTV |  ஈரான்) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் காமெனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வந்தார். ஒபாமா காலத்தில் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அவர் அறிவித்தார்.

மேலும் அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இந்த சூழலில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இது டிரம்ப் மேலும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க போகிறாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்ற போகிறாரா என்பதை தீர்மானிக்க உள்ளது.

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

Related posts

ரோஹிங்கியா மக்களை மியன்மார் அரசு பாதுகாக்க வேண்டும்

2024ம் ஆண்டு 2 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு

அமெரிக்காவிலும் OMICRON