உள்நாடு

அமெரிக்க அலுவலக பிரதானியாக இலங்கை பிரஜை நியமனம்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளாரான கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக இலங்கை – அமெரிக்க வம்சாவழியை ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 இற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜானதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக இலங்கை –அமெரிக்க இனத்தவரான ரோஹினி கொசோக்லு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைவாக அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுங்கள் – சஜித்