உலகம்

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

(UTV|அமேரிக்கா) – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய சகோதரரான ரொபட் டிரம்ப் இன்று காலமானார்

72 வயதுடைய ரொபட் டிரம்ப் உடலநலக்குறைவு காரணமாக அவதியுற்றுவந்த ராபர்ட் டிரம்ப் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைய சகோதரர் ரொபட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஃப்ரெட் டிரம்ப், ரொபட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் ராபர்ட் டிரம்ப் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ஆவார்.

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

மெக்ஸிகோவில் Johnson & Johnson தடுப்பூசிக்கு அனுமதி