கிசு கிசு

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை…

ஈரானின் ஆயுத மென்பொருள் கணினி கட்டமைப்பை இலக்குவைத்து அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் கணினி அமைப்புக்கள், ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் குறித்த சைபர் தாக்குதல் மூலம் முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் அறிவித்திருந்தது.

அந்நிலையில், அமெரிக்காவினால் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எவ்வாறாயினும் அந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை எனவும் ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் அமைச்சு இன்று (24ஆம் திகதி) அறிவித்துள்ளது.

 

 

Related posts

67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழும் பெண்மணி

ஒலிம்பிக்கை தாக்கியது கொரோனா

டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த சிறுவன்?