சூடான செய்திகள் 1

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தது.

நேற்றைய தினம் இலங்கை மீதான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3 இல் இருந்து தற்பொழுது Level 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

கோட்டாபய உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு ; அப்படி என்ன தெரிவித்தார்