சூடான செய்திகள் 1

அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றது.

இது தொடர்பாக பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகிந்த பால சூரிய தெரிவிக்கையில் ஜுன் மாதம் முதலாம் திகதி அன்னதான சாலைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது வரையில் 660 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த வருடத்தை போன்று இந்த வருடத்திலும் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புனித நகரங்களை கேந்திரமாக கொண்டு பெரும் எண்ணிக்கையிலான தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் புனித நகரத்தை கேந்திரமாக கொண்டு 112 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலன்னறுவை புனித நகரங்களை கேந்திரமாக கொண்டு 48 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உடல் ஆரோக்கியத்திற்கு பொருத்தமான உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான சாலைகள் ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்களிடம் தொகுதி பொறுப்பு சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு மாறாக உணவு வகைகளை விநியோகிக்கும் தான சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தான சாலைகளை பரிசோதனை செய்வதற்காக 1000க்கும் மேற்பட்ட குழுக்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு