உள்நாடு

அனைத்து நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு உரிய தினங்களுக்கு பதிலாக வேறு தினங்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறைமை மற்றும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணைகளுக்காக வழங்கப்படும் வேறு தினங்கள் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்துமாறும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

Related posts

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்