விளையாட்டு

அனைத்து தரவுகளும் என்னிடம் உள்ளது – தயாசிறி அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்த நாட்டு விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி தொடர்பான அனைத்து தரவுகளும் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிய ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வெயங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேவையொன்றால் அதனை வெளிப்படுத்தவும் தான் தயார் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிய ஜயசேகரவின் உரை

“உண்மை பேசுவது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளது.

உண்மையை சொன்னால் மறுநாள் பேஸ்புக்கில் இல்லாமல் செய்து விடுகின்றனர்.

தற்போது அதில் தான் அனைத்து விளையாட்டுக்களும் உள்ளன.

அண்மையில் உடற்தகுதி தொடர்பிலும் இதில் விமர்சிக்கப்பட்டது.

எனினும் நான் பொய் சொல்ல தயாரில்லை. உடற்தகுதி தொடர்பான அனைத்து தரவுகளையும் பெற்ற பின்னரே அது தொடர்பில் கதைத்தேன்.

அடுத்த வாரம் வேண்டும் என்றால் முழு இங்கைக்கும் அறியக்கூடியவாறு இந்த உடற்தகுதி தரவை வெளிப்படுத்த முடியும்.

வெளிப்படுத்தினால் என் மீது மேலும் சேறு பூசுவார்கள். எனினும் நான் அச்சம் கொள்ள மாட்டேன்.

காரணம் என்னவென்றால் இலங்கை விளையாட்டு வீர வீரங்கனைகளின் பிரச்சினைகள் பல உள்ளன.

நான் யாரையும் சவாலுக்கு உட்படுத்த தயாரில்லை. எனினும் இந்த உண்மைய புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மாற்றம்

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றி