அரசியல்உள்நாடு

அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related posts

மிஹிந்தலை விவகாரம்: மெளனத்தை கலைந்த மஹிந்த

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

மொட்டுக்கட்சி அலுவலகம் முன்னால் பதற்றம்: தப்பியோடிய பிரசன்ன