உள்நாடு

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ பேரணியால் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) –   அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, யோர்க் வீதி, செத்தம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு, பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்குமாறு, வெலிக்கடை பொலிசார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த இடத்தில், அமைதியை சீர்குலைக்கும் வகையில், ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் பொலிசாரின் அதிகாரத்திற்கு அமைய, செயற்படக்கூடிய இயலுமை உள்ளதாக நீதிவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது