கேளிக்கை

அனுஷ்கா ஷர்மாவுக்கு வலை?

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷ்ர்மாவை கோலி வுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.  அனுஷ்கா ஷர்மா இந்தியில் தயாரித்து நடித்த, ‘பரி’ திகில் படம் ஹிட்டானது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.  இதில் அனுஷ்கா ஷர்மாவையே நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியை காதலித்து மணந்த அனுஷ்கா சர்மா இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று சிலர் கூறியிருந்தனர் . ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா ஷர்மா.

 

 

 

 

 

 

 

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

தீபிகா படுகோனின் வைரலாகும் PHOTOS

வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய பிரபல நடிகை