வகைப்படுத்தப்படாத

அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு முதமலான இயற்கை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்க்கை நிலையை  கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.

அதற்கேற்ப நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள தொகுதி – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

அகலவத்தை தொகுதி: – அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

பண்டாரகம தொகுதி: -அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

மத்துகம தொகுதி: –  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

ஹொரண தொகுதி: -அமைச்சர் சரத் அமுணுகம

களுத்துறை தொகுதி: -அமைச்சர் ரவுப் ஹக்கீம்,  அர்ஜூன ரணதுங்க

மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ தொகுதி -: அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

தெனியாய தொகுதி: – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

மாத்தறை தொகுதி: – அமைச்சர் ரவி கருணாநாயக்க

வெலிகம தொகுதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஹக்மன தொகுதி: – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

காலி மாவட்டம் ஹினிதும தொகுதி – அமைச்சர் துமிந்த திசாநாயக்க

பத்தேகம தொகுதி – அமைச்சர் பி.ஹரிசன்

பெந்தர – எல்பிட்டிய தொகுதி – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

இரத்தினபுரி மாவட்டம் கலவான தொகுதி: – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி தொகுதி : அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

எஹலியகொட தொகுதி: – அமைச்சர் எஸ்.பி.நாவின்ன

பெல்மடுல்ல தொகுதி: அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா

நிவித்திகல தொகுதி: – அமைச்சர் நவின் திசாநாயக்க

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: – அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

கேகாலை மாவட்டம் -: அமைச்சர் தயா கமகே அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Related posts

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

வடக்கில் படையினர் வசமிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி

சைட்டம் விவகாரம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!