வகைப்படுத்தப்படாத

அனர்த்த இழப்பீடு இன்று முதல்

(UTV|COLOMBO)-சூறாவளி மற்றும் பலத்த மழையால் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த தரப்பினருக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய சொத்துக்கள் சேதமடைந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுள் கடந்த வெள்ளிக்கிழமை (1) மாவட்ட செயலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டில் தற்போது தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்தத்தால் 31 ஆயிரத்து 698 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அதில் 801 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று

Sri Lanka inks agreement with India to upgrade railway lines

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !