கேளிக்கை

அந்த ஹீரோவால் தான் இங்க இருக்கேன் – ரியோ [PHOTO]

(UTV|இந்தியா) – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ் . இந்த படத்தின் வெற்றியத் தொடர்ந்து பாஸிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும்‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பானா காத்தாடி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, சித்தார்த் விபின், எம்.எஸ் பாஸ்கர், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்த மீம் ஒன்றை பகிர்ந்த ரியோ, ”5 வருஷத்துக்கு முன்னாடி ஆங்கராக ஹீரோவை இன்டர்வியூ பண்ணேன். 5 வருஷத்துக்கு பிறகு அந்த ஹீரோவால் இங்க இருக்கேன்” என சிவகார்த்திகேயன் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Image

Related posts

வெற்றி நடை போடும் கோமாளி கிங்ஸ்

மஹத் பிராச்சி தம்பதிக்கு ஆண் வாரிசு

‘ஜகமே தந்திரம்’