வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

(UTV|ANDAMAN) அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி 4.7 ரிக்டர் முதல் 5.2 ரிக்டர் வரையில் 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Sri Lankan Contingent’s Phase 6 group leaves for UN Missions [UPDATE]