உள்நாடு

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

(UTV| கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை செல்லுபடிற்றதாக்குமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு பரிசீலனைக்கு இன்று(16) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தேடும் உதய கம்மன்பில!

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து