கேளிக்கை

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…

(UTV|INDIA)-‘ஒரு அதார் லவ்’ படத்தில் காதல் பாடல் காட்சி ஒன்றில் கண்ணடித்து ஸ்டைல் காட்டி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் அவரது கண்ணடிக்கும் பாணி பிரபலமாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு கூகுள் இணைய தளத்தில் தேடுதல் பட்டியலிலும் அவர் முதலிடமும் பிடித்தார். ஆனால் பிரியா வாரியர் நடித்த முதல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் காலதாமதம் ஆகி வருகிறது.

பள்ளி மாணவியாக கண்ணடிக்கும் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர் தற்போது பருவ பெண்ணாக வளர்ந்திருக்கிறார். இதையடுத்து தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி போட்டோ செஷன் நடத்தி இணைய தளத்தில் படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனாலும் கண்ணடித்து நடித்தபோது அவர் பேசப்பட்டதுபோல் இப்படங்களை ரசிகர்கள் ரசிக்கவில்லை.

ஒரு சில ஹீரோயின்கள்போல் படுகவர்ச்சியாக போஸ் அளித்து புகைப்படங்கள் வெளியிட தயக்கம் காட்டுவதால் பிரியா பிரகாஷை நெட்டிஸன்கள் வம்பிழுத்தும், கலாய்த்தும் வருகின்றனர். ‘நீங்க அந்த நடிகைங்க மாதிரி கவர்ச்சியாக போஸ் அளிக்க சரிப்பட்டு வரமாட்டீங்க..’ என்று கமென்ட் வெளியிட்டுள்ளனர். மினுமினுக்கும் பட்டிழையால் ஆன சிவப்பு நிற கவுன் அணிந்து பிரியா போட்டோவுக்கு அளித்த போஸில் அவரது முகம் வாட்டமாக இருப்பதால் இதுபோன்ற எதிர்மறை கமென்ட்கள் வருகிறதாம்.

Related posts

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது

ஸ்ரீதேவிக்காக தன்னை தயார் படுத்தும் ரகுல் ப்ரீத் சிங்