வணிகம்

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

(UTVNEWS | COLOMBO ) – தெற்கு அதிவேக வீதியில் இரண்டு போக்குவரத்து வழிதடங்களுக்கான பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையும் மற்றும் காலியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சேவைகளின் கட்டணங்களே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் இருந்து மாத்தறை வரை இதுவரை 720 ரூபா கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் இது தற்போது 700 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீர்கொழும்பில் இருந்து காலி வரை இதுவரை 630 ரூபா கண்டனம் அறவிடப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டணம் 600 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020 ஆரம்பம்

கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் துரியான் செய்கை

நடமாடும் வங்கி கடன் சேவை