சூடான செய்திகள் 1

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக வீதியின் கடவத்தையில் இருந்து மாத்தறை வரையில் இருமருங்கிலும், ஒரு இலட்சம் மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

தெற்கு அதிவேக வீதி அமைக்கப்படும்பொழுது வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவது இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு? வரலாற்று ஆய்வு நூல் எழுதிய பிள்ளையான்

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்

தைப்பொங்கலுக்கு பின் அரச ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி என்கிறார் ஜனாதிபதி!