உள்நாடு

அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – மஹவெல பிரதேசத்தில் அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹஉல்பத, ஹதமுணகால பிரதேசத்தில் இன்று (06)  முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செலகம மற்றும் மஹவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது 33 ஆயிரம் வோல்ட் சக்தி வாய்ந்த மின்கம்பி அறுந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த பலா மரத்தின் கிளையொன்று, உடைந்து மின் கம்பி மீது வீழ்ந்ததையடுத்து குறித்த மின் கம்பி அறுந்து லொறி மீது வீழ்ந்துள்ளது.

அதன்போது லொறியினுள் மூவர் இருந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் லொறியில் இருந்து வெளியில் பாய்ந்து உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

“சில்லறை தீர்வுகளை மட்டும் வழங்க வேண்டாம்”

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்