கிசு கிசு

அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ரஞ்ஜன்:ஏழு சிறு பௌத்த பிக்குகளுக்கு எயிட்ஸ்  

(UTVNEWS | COLOMBO) –  ஏழு சிறுவர் பௌத்த பிக்குகள் எயிட்ஸ் தொற்றுக்கான சிகிச்சைகளை பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.

நேற்று உயர்தர பரீச்சை எழுதி முடித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,பௌத்த பிக்குகள் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான காணொளிகளும் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த காணொளியை வைத்து, யார் அந்த பௌத்த பிக்கு என்ற அடையாளத்தையும் காண முடியும். என தெரிவித்தார்.

Related posts

மஹேலவின் அதிரடி சீற்றம்…

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி