உள்நாடு

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

(UTV கொழும்பு)- அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்த விற்பனையாளர்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 800-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

இறந்த சிறுவனின் சடலம் 52 நாட்களுக்கு பின் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இல்லை