சூடான செய்திகள் 1

அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

(UTV|COLOMBO)-வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றது. இந்த பாதிப்புக்கு நானும் ஒரு காரணமாகின்றேன். ஏனெனில் ஆசிரியர்களுக்கு விடுமுறைக்கான அனுமதி வழங்குபவன் நானே. அதிபர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறைக்கு அனுமதி அளித்து இறுதியில் என்னிடம் அனுப்புகின்றார்கள். அதில் நான் கையொப்பம் இடுகின்றேன். எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என எனக்கு தெரியாது. இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி அவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கியிருந்தேன். சிறந்த சேவை ஆற்றுபவர்களை இது போன்று பாராட்டி ஊக்குவிப்பது எமது கடமை. ஆனால் வடமாகாணத்தில் அதிகளவில் விடுமுறை எடுக்காது சேவையாற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதற்கு திட்டம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

editor

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை-கணவரை கைது செய்ய நடவடிக்கை