உள்நாடு

அதிக உயிரிழப்பிற்கு ‘டெல்டா’ வைரசே காரணம்

(UTV | கொழும்பு) –  14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென தெரிவிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரைவாக தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைத்தியசாலைகள், கொரோனா சிகிச்சை நிலையங்களில் தொற்றாளர்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இதற்காக சமூகப்பொறுப்போடு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பயணங்களைக் குறைத்து பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் உயிரிழப்பதற்கு டெல்டா வைரஸே காரணமெனவும், நாட்டை முழுமையாக 14 நாட்களுக்கு முடக்கினால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

எனவே, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விரைவாக தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும். கொரோனா வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே நம் முன்னே இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை