உள்நாடு

எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கம்

(UTV | கொழும்பு) –  அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனுக்காக பாடுபடுவதே தனது நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் கருத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்ட ‘சக்வல’ வேலைத்திட்டத்தின் ஊடாக மொனராகலை றோயல் கல்லூரிக்கு பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் ‘சக்வல’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பாடசாலை ஒன்றிற்கு வழங்கப்பட்ட 34ஆவது பேருந்து நேற்று (16) மொனராகலை றோயல் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

பேருந்தை அன்பளிப்பாக வழங்கியதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை மாணவர்களுடன் பல விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

சஜித் பிரேமதாச பேருந்தை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் பாடசாலைக்கு பேருந்தை ஓட்டிச் சென்றிருந்தார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பாடசாலை மாணவர்களை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபடுத்தினார்.

“அரசு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சமுதாயத்திற்கு பலம் சேர்ப்பதே எனது நோக்கம். இப்படி எதிர்கட்சியாக இருந்து கொண்டு நாங்கள் வேலை செய்யும் போது… எதிர்க்கட்சியில் உள்ள மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? 74 ஆண்டுகால வரலாற்றில் இது வழக்கமான பெருமையாகும்.

Related posts

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!

கொரோனா; புதிய தொலைப்பேசி இலக்கம்

இதுவரை 103 பேர் சிக்கினர்