வகைப்படுத்தப்படாத

அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு

(UTV|COLOMBO)-ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்து உள்ளது.

கடந்த 21-ந் தேதி முதல் அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வந்து விடுவதாக அறிவித்து உள்ளது. இந்த மாதத்தில் வடகொரியாவின் புங்கியே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் முக்கிய பங்காற்றி வருகிற தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுடன் நேற்று தொலைபேசியில் பேசினார்.

அப்போது அவர், வடகொரியாவின் அணு ஆயுத தளம் மூடப்படுவதை ஐ.நா. சபையின் சார்பில் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த தகவலை தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காவற்துறை ஒன்றுக்கு முன்னாள் தீவிரநிலை: 8 பேர் கைது

ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

Anglican Church Head to visit Sri Lanka