வகைப்படுத்தப்படாத

அட்டன் மல்லியப்பூ தோட்ட மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் மலர்கிறது : ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – அட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்குத் தற்போது தான் விடிவு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சரின் விசேட பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கிணங்க 5 இலட்சம் ரூபாய் நிதியில்

செப்பனிடப்பட்டுள்ள அட்டன் மல்லியப்பூ தோட்டப் பாதையைத் திறந்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின் , தோட்டத் தலைவர் சிவஞானம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தத்திறப்பு விழாவில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , தொ.தே.சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , உபதலைவர் நகுலேஸ்வரன் , அம்பகமுவ தொகுதி இணைப்பாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

அட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்கு அமரர் சந்திரசேகரன் வீடமைப்புத்திட்டத்தினை வழஙிகி இந்த மக்களைக் கௌரவப்படுத்தினார். ஆனால் அதற்கு பின்பு இந்த மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. இன்று இந்தத் தோட்ட மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை வைத்து எம்முடன் இணைந்துள்ளனர். அவரின் அமைச்சின் ஊடாக இந்தத் தோட்ட ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி கடந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக 5 கோடி ரூபாவில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தோட்டத்துக்கான நுழைவாயில் பாதை இன்று எனது முயற்சியினால் முறையாக செப்பனிடப்பட்டுள்ளது.

அட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்குத் தற்போது தான் விடிவு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சரின் விசேட பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கிணங்க 5 இலட்சம் ரூபாய் நிதியில்

செப்பனிடப்பட்டுள்ள அட்டன் மல்லியப்பூ தோட்டப் பாதையைத் திறந்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின் , தோட்டத் தலைவர் சிவஞானம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தத்திறப்பு விழாவில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , தொ.தே.சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , உபதலைவர் நகுலேஸ்வரன் , அம்பகமுவ தொகுதி இணைப்பாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

அட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்கு அமரர் சந்திரசேகரன் வீடமைப்புத்திட்டத்தினை  வழங்கி இந்த மக்களைக் கௌரவப்படுத்தினார். ஆனால் அதற்கு பின்பு இந்த மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. இன்று இந்தத் தோட்ட மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை வைத்து எம்முடன் இணைந்துள்ளனர். அவரின் அமைச்சின் ஊ டாக இந்தத் தோட்ட ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி கடந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக 5 கோடி ரூபாவில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தோட்டத்துக்கான நுழைவாயில் பாதை இன்று எனது முயற்சியினால் முறையாக செப்பனிடப்பட்டுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow

New Jaffna Commander assumes duties