சூடான செய்திகள் 1

அஞ்சல் மா அதிபரின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO)-தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு சேவைக்காக பிரசன்னமாக முடியாது போனால், பணியாளர்கள் அருகில் உள்ள அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு சேவையின் பொருட்டு வருகை தருமாறு அஞ்சல் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அஞ்சல் மா அதிபர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்வாறு பிரசன்னமாகும் சேவையாளர்களுக்கு தேவையான வாகன போக்குவரத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு திரும்பும் சேவையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அஞ்சல் தொழிற்சங்கத்தினருக்கும், வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிடைந்துள்ளது.

இந்த நிலையில் தமது போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெறும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் சேவை பணியாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய சில பாகங்களிலும் பேரணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அஞ்சல் சேவை தொடர்பில் விசேட வேதனம் தயாரிக்கப்பட்டு வேதன நிர்ணய சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

அதனை அனுமதிப்பதாக வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அதற்கு வாய்மூல இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதாகவே தமக்கு புலப்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேநேரம், வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு தொழிற்சங்கத்தினரும் இணங்கியதாக அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டீ.பீ. மீகஸமுல்ல தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி