கேளிக்கை

அஞ்சலியின் அதிரடி முடிவு…

(UTV|INDIA)  நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’. பேய்க்கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாகவே கிடைத்தன.

அந்நிலையில் தனக்கு பேய்க்கதை ஒத்து வராது என நினைத்தாரோ என்னவோ, அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. அடுத்ததாக தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

Related posts

ஹன்சிகா : பிறந்தநாள் சர்ப்ரைஸ்

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)

தலைகீழான சமந்தா