உலகம்சினிமாசூடான செய்திகள் 1

அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது -அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது.

இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் “24H Dubai 2025” கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சி நேற்று (07) துபாயில் நடைபெற்றது.

அப்போது அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் வேகமாக ரேஸ் ட்ராக்கில் சென்ற போது பக்கவாட்டில் இருக்கும் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

இதனால், கார் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அதிஷ்டவசமாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

மேலும் 63 பேர் பூரண குணம்

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து