உள்நாடு

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப இன்று முதல் தடை

(UTV|COLOMBO ) – பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற துரித இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பேருந்துகளில் ஒலிபரப்பக்கூடிய பொருத்தமான ஆயிரம் பாடல்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

கொரோனா : பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்